search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியா ஆனந்த்"

    கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

    வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பதால், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
    ‘எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார்.அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது.

    ஒருவேளை மதம் மாறிவிட்டாரா? என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ‘அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்கு பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.



    மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது. இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த முயற்சி’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரியா ஆனந்த், சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். #PriyaAnand
    நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ‘எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். பிரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமாக பிரியா ஆனந்த் இருக்கிறார் என்று அவர் தெரிவித்திருந்தார்.


    அந்த டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரியா ஆனந்த் கூறியிருப்பதாவது:- நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை. ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன். உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது.


    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    பிரியா ஆனந்த்தின் இந்த பதிவிற்கு பிறகு அந்த பதிவை போட்ட நபர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். #PriyaAnand

    விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #AdithyaVarma #DhruvVikram
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க வர்மா என்ற பெயரில் பாலா தமிழில் இயக்கினார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் படம் திருப்தியாக இல்லை என்றும், முழு படத்தையும் கைவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படப்பிடிப்பை நடத்தப்போவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்தார்.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் துருவ் நடிக்க ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரானது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரிசய்யா இந்த படத்தை இயக்கினார். இந்தியிலும் கபீர்சிங் என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டது.


    கபீர் சிங் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆதித்ய வர்மா படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஆதித்யா வர்மா படத்தை படக்குழுவினர் கைவிட்டு விட்டதாகவும், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தையே தமிழில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

    இதனை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் போர்ச்சுக்கல் செல்கிறார்கள் என்று தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu

    பிரியா ஆனந்த் நடிப்பில் எல்கேஜி படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா ஆனந்த் அளித்த பேட்டியில், ‌ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே தான் இந்தியா வந்ததாக கூறினார். #PriyaAnand
    வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என வேகமாக முன்னணி நடிகையானார். சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் வெளிநாட்டில் வளர்ந்தவள். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவள்.

    இங்கே சென்னையில் என்னுடைய தாத்தாவும், பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஒரு ஹீரோ எனக்கு வாய்ப்பு கொடுத்தார், தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பதெல்லாம் எனக்கு நிகழவில்லை. எனக்கு காட்பாதர் மாதிரி யாரும் இல்லை.



    சொல்லப்போனால் சினிமாவுக்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது நடிகையாக அல்ல. ‌ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று, அப்படியொரு தவிப்புடன் இருந்தேன்.

    ‌ஷங்கர் சாரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். #PriyaAnand #LKG #Shankar

    ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எல்கேஜி’ படத்தின் விமர்சனம். #LKG #LKGMovie #LKGMovieReview
    ஆளுங்கட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதே கட்சியில் பேச்சாளராக இருக்கிறார் இவரின் தந்தை நாஞ்சில் சம்பத். பேச்சாளராகவே இருந்து வரும் தந்தையை போல் இல்லாமல், கவுன்சிலரில் இருந்து எம்.எல்.ஏ, எம்.பி என அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

    இவருடைய மாமா மயில்சாமி துணையுடன் ஏரியா மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இவரின் கட்சித் தலைவரான முதலமைச்சர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருப்பவர் ராம்குமார். இவருக்கும் அதே கட்சியில் இருக்கும் ஜே.கே.ரித்திஷுக்கும் மோதல் இருந்து வருகிறது.

    முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த ஆர்.ஜே.பாலாஜி, முதலமைச்சர் தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக நினைத்து சென்னைக்கு வருகிறார். அங்கு சமூக வலைத்தளத்தில் சிறந்து விளங்கும் நாயகி பிரியா ஆனந்தை சந்திக்கிறார். 



    இவர் மூலம், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக என்னவெல்லாம் வழி இருக்கிறதோ, அதையெல்லாம் செய்து பிரபலமாகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில், முதலமைச்சர் இறக்க, ராம்குமார் ஆர்ஜே பாலாஜியை அழைத்து பேசி இடைத்தேர்தலில் நிற்க வைக்கிறார்.

    இதற்கு ஜே.கே.ரித்திஷ் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி, அதே தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இறுதியில், ஆர்ஜே பாலாஜி, ஜே.கே.ரித்திஷை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி, இப்படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக காமெடியில் அதகளப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

    நாயகி பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜிக்கு ஆலோசனையாளராகவும், அறிவுரையாளராகவும் நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி வில்லனாக வரும் ஜே.கே.ரித்திஷ், பாலாஜிக்கு அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத், மாமாவாக வரும் மயில்சாமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராம்குமார் நடிப்பில், சிவாஜியும், பிரபுவும் வந்து செல்கிறார்கள்.



    ஆர்ஜே பாலாஜி மனதில் நினைத்ததை திறம்பட இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.பிரபு. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த அரசியல் விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்...’ என்ற ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது. விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘எல்கேஜி’ ஜெயிச்சாச்சி. 
    துருவ் விக்ரம் நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. #DhruvVikram #Varma #ArjunReddy
    ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.



    தற்போது இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கிரிசாயா இப்படத்தை இயக்குகிறார். ரவி கே சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இ4 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 
    ஆர்ஜே பாலாஜி நடிப்பில், நடப்பு அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘எல்கேஜி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #LKG #RJBalaji
    ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். நடப்பு அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். 

    இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.



    இதை நடிகர் ஆர்ஜே பாலாஜி, ‘அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு #LKGFromFeb22’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #LKG #RJBalaji 
    மலையாளத்தில் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான படம் நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து அங்கேயே கவனம் செலுத்த இருக்கிறார். #PriyaAnand
    பிரியா ஆனந்த், வாமனன் படத்தில் அறிமுகம் ஆனாலும் எதிர் நீச்சல் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

    தொடர்ந்து அதர்வா, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் என இளம் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த் சிலகாலம் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த எஸ்றா படம் பிரியா ஆனந்துக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

    எனவே தொடர்ந்து மலையாளத்தில் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்து திலீப்புக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மோகன்லாலின் நண்பரான இயக்குனர் உன்னிக்கிருஷ்ணன் இயக்குகிறார். பிரியா ஆனந்த் நிவின் பாலி, மோகன்லாலுடன் நடித்திருக்கும் காயம்குளம் கொச்சுன்னி படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
    சரியான ஒரு நபர் கிடைத்தால் தாராளமாக கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லையெனில் தனியாக இருப்பதே நல்லது என்று பிரியா ஆனந்த் கூறி இருக்கிறார். #PriyaAnand
    ‘வாமனன்’ படம் மூலமாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். சில தமிழ் படங்களில் தலைகாட்டியிருந்தாலும் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார்.

    தற்போது, மலையாள சினிமாவையே அதிக எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ மற்றும் தமிழில் ‘எல்.கே.ஜி’ ஆகிய படங்களில் நடித்துவரும் பிரியா ஆனந்த் ஒரு பேட்டியில் “கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை. பாட்டி காலத்துல தான் ஒரு பொண்ணுனா கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணாமலும் சில பெண்கள் இருக்காங்க.



    நான் என்ன படிக்கணும், எந்த வேலைக்குப் போகணும், எப்படி இருக்கணும்னு முடிவு பண்ற பெண்களுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பக்குவமும் இருக்கு. சரியான ஒரு நபர் கிடைச்சா, தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைனா தனியாக இருப்பதே நல்லது” என்று கூறி இருக்கிறார். #PriyaAnand

    விஜய், அஜித் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு இல்லை என்றும், என்னோட பாதை வேறு, ஆர்வம் வேறு என்றும் பிரியா ஆனந்த் கூறியிருக்கிறார். #PriyaAnand
    ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ என்று வேகமாக வளர்ந்து வந்த பிரியா ஆனந்தை சில காலமாக தமிழில் பார்க்க முடியவில்லை. தற்போது ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக எல்.கே.ஜி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    விஜய், அஜித் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டதற்கு ‘ஒரு வி‌ஷயத்தை எதிர்பார்த்து அது நடக்காதபோதுதானே வருத்தம் வரும். நான் அப்படி நினைத்ததும் இல்லை, வருத்தப்பட்டதும் இல்லை. என்னோட பாதை வேறு, ஆர்வம் வேறு. நான் எப்போதுமே படங்களின் எண்ணிக்கை சம்பளத்துக்காக மட்டும் நடித்ததில்லை. சினிமாவை நேசித்துதான் சினிமாவுக்குள் வந்தேன்.



    எனக்குப் பல மொழிகள் தெரியும்; மொழி எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. எந்த மொழிப் படமா இருந்தாலும் அது என் மனதுக்குப் பிடிக்கவேண்டும். எனக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும்.

    அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு மொழியில் என் ஒருசில படங்கள்தான் வெளியாகிறதே என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. நடிப்பைத் தாண்டி எதையும் தலையில ஏத்திக்க மாட்டேன்’ என்று கூறி இருக்கிறார். #PriyaAnand

    ×